மாநிலங்களவைத் தேர்தல்.. தமிழகத்தில் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து  வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தல்.. தமிழகத்தில் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தைச் சேர்ந்த 6 இடங்கள் உள்பட நாடு முழுவதும் காலியாகும் தருவாயில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மே-31ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.

தமிழகத்தை பொறுத்தவரை 6 இடங்களுக்கு சுயேட்சைகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

இதேபோல்  மத்தியப் பிரதேசத்தில் 3 பேர், சட்டீஸ்கரில் 2 பேர், பஞ்சாப்பில் 2 பேர் மற்றும் ஜார்கண்ட்டில் 2 பேர் என நாடு முழுவதும் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மகாராஷ்ட்ரா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டி நிலவுவதால், அங்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.