வலுவடையும் இந்தியா கூட்டணி; புதியதாக இணையும் இருக் கட்சிகள்!

வலுவடையும் இந்தியா கூட்டணி; புதியதாக இணையும் இருக் கட்சிகள்!

வியாழன் தொடங்கி நடைபெறவுள்ள இந்தியா எதிர்கட்சிகளின் 3வது கூட்டத்தில் புதிதாக இரு கட்சிகளுடன் 28 கட்சிகள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே வழங்கும் இரவு உணவுடன் இந்தியா கூட்டணிக் கட்சியினரின் 3வது கூட்டம் இரு நாள் கூட்டமாக வியாழக்கிழமை மும்பையில் தொடங்குகிறது. 

அப்போது கூட்டணிகள் தொடர்பான முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், செப்டம்பர் 1ம் தேதி கூட்டணியின் இலச்சினையை வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்சித் தலைவர்களுக்கு வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மும்பை சென்றடைந்த NCB தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேட்டியளித்தார். அப்போது இரு புதிய கட்சிகளுடன் 28 கட்சிகளின் 63 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே தத்துவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதே இலக்கு எனவும் பாரதமாதாவை காக்கும் எண்ணத்தில் ஒரே எண்ணத்துடன் எதிர்கட்சிகள் இணைந்துள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை மும்பைக்கு புறப்பட்டுச் செல்கிறார். ஆகஸ்ட் 1ம் தேதி எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறும் மும்பையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆலோசனையும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:“தங்க வைர ஆபரணங்கள் மண்ணுக்குள் புதைப்பு; சீமான்மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்” - நடிகை விஜயலெட்சுமி.