பெண்களை விசாரிக்கும்போது காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை- மத்திய அரசு

பெண்களை விசாரிக்கும்போது காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை- மத்திய அரசு

பெண்களை விசாரிக்கும் போது காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.  

இதுதொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை போலீஸ் அல்லது நீதிமன்ற காவலில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்ததாக எவ்வித வழக்கும் பதிவாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெண்களை விசாரிக்கும்போது அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் துறை ரீதியான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு  பரிந்துரைத்துள்ளதாகவும்,  மாநிலத்தின் பொது ஒழுங்கு ஆகியன மாநிலங்களின் வரம்பு எனவும் கூறியுள்ளார்.