52 புதிய முகங்கள் எண்ட்ரீ...ஓரங்கட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள்...ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்!

52 புதிய முகங்கள் எண்ட்ரீ...ஓரங்கட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள்...ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மூத்த தலைவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்க்கு கும்மாங்குத்து விட்ட வாலிபர்..! சுக்கு நூறாக நொறுங்கிய ஏடிஎம் இயந்திரம்..!

இந்த நிலையில், மூத்த தலைவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அவர்களது ஆதரவாளர்கள் பெங்களூரு நகரின் ஜெய்நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு பகுதிகளிலும்  மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் பாஜக தலைமைக்கு எதிராக விடிய விடிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.