ஹரியானா விவகாரம்: VHP பேரணிக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...!

ஹரியானா விவகாரம்:  VHP பேரணிக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...!

ஹரியானா கலவரம் தொடர்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் பேரணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குருகிராம் மாவட்டத்தின் நுஹ் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் சென்றபோது வெடித்த கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து, தலைநகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட அவ்வமைப்பினருக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுசொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வெறுப்புப் பேச்சில் ஈடுபடாமல் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு நிகழாமல் பேரணி நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேலும், பாதுகாப்பை பலப்படுத்தி, சிசிடிவி பொருத்தி கண்காணிக்குமாறு டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   |  விஷ்வ இந்து பரிஷத் போராட்டம் அறிவிப்பு; போலீஸ் குவிப்பு...!