லடாக்கின் கிழக்கு எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம்...  எல்லையில் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முடிவு...

லடாக்கின் கிழக்கு எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.

லடாக்கின் கிழக்கு எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம்...  எல்லையில் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முடிவு...
லடாக்கின் கிழக்கு எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. அதை தணிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டாலும், பதற்றம் தணிய மறுக்கிறது. அதேநேரம் சிக்கிம் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே நேரடி தொலைபேசி வசதி நேற்று ஏற்படுத்தப்பட்டது. வடக்கு சிக்கிமின் கோங்ரா லாவில் பணியில் உள்ள இந்திய ராணுவத்துக்கும், திபெத்தின் கம்பா சோங்கில் பணியில் உள்ள சீன ராணுவத்துக்கும் இடையே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
 
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இருநாட்டு ஆயுத படைகளுக்கு இடையேயான தொடர்புக்காக கமாண்டர்கள் மட்டத்தில் நன்கு நிறுவப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. இந்த ஹாட்லைன்கள், எல்லைகளில் பல்வேறு துறையிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நீண்ட தூரம் கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.