சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் 3வது பட்டியலை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு...

சுவிஸ் வங்கி கணக்கின் 3வது பட்டியலை இந்த மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின்  3வது பட்டியலை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு...

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக திகழ்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்றதும், கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் செய்யும் முதலீடுகள் குறித்த பட்டியல் பகிர்ந்து கொள்ளப்படும்.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியல், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டாவது பட்டியல் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது பட்டியல் இந்த மாத இறுதிக்குள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையாக சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்த தகவலும் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.