கட்சியின் நிரந்தரத் தலைவர் யார்..? இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்... 

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பதவி குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

கட்சியின் நிரந்தரத் தலைவர் யார்..? இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்... 

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை10 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். 

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், உள்கட்சி தேர்தல் நடத்துவது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என மூத்த தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.