நாளை வாக்கு எண்ணிக்கை...தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்...ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

நாளை வாக்கு எண்ணிக்கை...தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்...ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தீவிரமாக இறங்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையம்:

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப் பேரவைத் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 63.31% வாக்குளும், 2-ஆம் தேர்தலில் 59% வாக்குகளும் பதிவானது.

இதைத்தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களை கொண்டு நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கி உள்ளது.

கருத்துகணிப்பு:

இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் அவசியம் என்ற நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியே இந்த முறை ஆட்சியை கைப்பற்றும் என்றும், 2-வது இடத்தை காங்கிரசும், 3-ஆம் இடத்தை ஆம் ஆத்மி பிடிக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிய வந்தது.

இதையும் படிக்க: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்...!

அதேபோல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 இடங்கள் தேவை என்பதால் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த முறையும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்குமா? அல்லது பாஜக தோல்வியடையுமா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் நிலவி வருகிறது.