எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி 18% அதிகரிப்பு.. வேற எதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி உயர்வு?.. விவரம் இதோ

எல்இடி விளக்குகள் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்துள்ளப்பட்டுள்ளது.

எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி 18% அதிகரிப்பு.. வேற எதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி உயர்வு?.. விவரம் இதோ

47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஆயிரத்திற்கும் குறைவான வாடகையுள்ள தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.

தண்ணீர் எடுக்கும் மோட்டார் பம்புகள், எல்.இ.டி விளக்கு, பேனா மை, கத்தி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி  12-யிலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

இதேபோல் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மருத்துவமனை அறை வாடகைக்கு 5 சதவீத வரியும், அஞ்சல் அட்டை, உள்நாட்டு கடிதம், புக் போஸ்ட் ஆகியவற்றை தவிர அனைத்து அஞ்சல சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி காசோலைகளுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹீட்டருக்கான ஜிஎஸ்டி வரியும் 5-யிலிருந்து 12 சதவீதமாக உயர்கிறது. கோதுமை, பன்னீர், பேக் செய்யப்பட்ட தயிர், வெல்லம், உலர் பருப்பு வகை காய்கறிகள் போன்ற பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.