ஐ.நா. கவுன்சிலின் முன்மாதிரியான செயல்பாடுகள்... இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா... 

கடந்த ஒரு மாதமாக, இந்தியா தலைமையிலான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, அமெரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஐ.நா. கவுன்சிலின் முன்மாதிரியான செயல்பாடுகள்...  இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா... 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் இந்தியா தலைமை ஏற்றது. இந்தியா தலைமையிலான, ஐ. நா.,பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள், இதுவரை இல்லாத வகையில் பல முன்மாதிரிகளை கொண்டதாக அமைந்திருந்தன.

பிரதமர் மோடி தலைமையில், கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்திய பிரதமர் ஒருவர், ஐ. நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை ஏற்றது இதுவே முதன் முறையாகும். ஆசிய - பிசிபிக் கடல் பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழலில், கடல்சார் பாதுகாப்பு குறித்து ஐ. நா.,பாதுகாப்பு கவுன்சில் முதன் முறையாக விவாதித்ததும் கூடுதல் சிறப்பாகும்.

வெளியுறவு துறை அமைச்சர், ஜெய்சங்கர், அமைதிப் படை குறித்தும், பயங்கரவாத தடுப்பு பற்றியும், ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலின் இரு கூட்டங்களில் உரையாற்றினார். இதில் முதன் முறையாக, அமைதிப் படைக்கான தொழில்நுட்ப உதவி பற்றி விவாதித்து, தலைமைப் பொறுப்பில் இருந்த இந்தியா அறிக்கை வெளியிட்டது.

ஆப்கன் தொடர்பாக, ஒரே மாதத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும், இதுவரை நடைபெறாதது. இந்த வகையில், இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு, அமெரிக்கா, அயர்லாந்து, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. அந் நாடுகளுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.