டிஜிசிஐ தலைவர் டாக்டர் வி.ஜி. சோமானியின் பதிவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு!!!

டிஜிசிஐ  தலைவர் டாக்டர் வி.ஜி. சோமானியின் பதிவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு!!!

இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பின் தலைவர் டாக்டர் வேணுகோபால் சோமானியின் பதிவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் வேணுகோபால் சோமானி ஆகஸ்டு 14, 2019 அன்று மூன்று வருல் காலத்திற்கு  இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மத்திய அமைச்சகத்தின் உத்தரவின் படி சோமானி மேலும் மூன்று மாதங்கக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து பொறுப்பில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அடுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பின் தலைவருக்கான விண்ணப்பங்களை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பானது நாடு முழுவதும் மருந்து விநியோகத்தின் தரத்தை உறுதி செய்யும் பொறுப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தலைமை தாங்குகிறது.  புதிய மருந்துகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் மருத்துவ பரிசோதனை ஒழுங்குபடுத்துவதற்கும் அதிகாரம் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: மருந்து தட்டுப்பாடு…கடும் நெருக்கடியில் இலங்கை!