கொரோனா தடுப்பூசி டோஸ் 100 கோடி இலக்கை அடுத்த வாரம் எட்டும்...  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை...

மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 'டோஸ்' 100 கோடி என்ற இலக்கை அடுத்த வாரம் எட்டும்,'' என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி டோஸ் 100 கோடி இலக்கை அடுத்த வாரம் எட்டும்...  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை...

கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த பிரபல பாடகர் கைலாஷ் கேரின் டிக்கா கீதம் என்ற பாடல் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா தடுப்பூசி பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருவதாகவும்,  பணிகள் தீவிரமாக தொடர்வதால் மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை அடுத்த வாரம்
100 கோடியை கடக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், இரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், 70 சதவீதம் பேர் கண்டிப்பாக முதல் டோஸ் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா தடுப்பூசி தயாரிக்க 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என கருதப்பட்டது என்றும், ஆனால் விரைவான ஆய்வுகளின் பலனாக உள்நாட்டில் தயாரான தடுப்பூசி மக்களை சென்றடைந்து உள்ளதாகவும் பெருமைபட கூறினார்.