சாய்ங்காலம் 6 மணி வரை தான் கரண்ட் இருக்கும்… குறுஞ்செய்தியால் அதிர்ந்த பொதுமக்கள்…  

மாலை 6 மணி வரை மட்டுமே மின்சாரம் கையிருப்பு உள்ளது என்று டெல்லி மக்களுக்கு வந்த குறுச்செய்தி அம்மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்மழை உள்ளிட்ட சில காரணங்களால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மின்சாரம் வழங்கும் பணியை "டாடா" நிறுவனம் கவனித்து வரும் நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரி அந்நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மக்களை அதிர வைத்துள்ளது.

அதாவது குறைந்த அளவு நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நிலை உள்ளதாகவும் அதனால் தயவு செய்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் டெல்லி வாசிகள் கவலையடைந்துள்ளனர். .