7-ம் தேதி முதல் வார இறுதி நாள் ஊரடங்கு அமல் : பெங்களூரில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்

கர்நாடகத்தில் வருகிற 7-ம் தேதி முதல் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

7-ம் தேதி முதல் வார இறுதி நாள் ஊரடங்கு அமல் : பெங்களூரில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்

கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு வரும் 7-ம் தேதி முதல் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அசோக், வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளார். 

ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு வருகிற 7-ம் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், வார இறுதி ஊரடங்கில் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு மட்டும் தனியாக வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மூடப்படுகின்றன. இதைப்போல மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்பான கல்லூரிகளை தவிர மற்ற அனைத்து கல்லூரிகளும் மூடப்படுகின்றன.