சித்துவின் ஆலோசகர்களை கட்சி நியமிக்கவில்லை... ஹரிஷ் ராவத் விளக்கம்...

சர்ச்சைக்குரிய தேசிய விவகாரங்களில் மூக்கை நுழைத்து கருத்து தெரிவித்த நவ்ஜோத் சித்துவின் ஆலோசகர்களை, தேவைப்பட்டால் நீக்குவோம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

சித்துவின் ஆலோசகர்களை கட்சி நியமிக்கவில்லை... ஹரிஷ் ராவத் விளக்கம்...

பஞ்சாப் அரசியலில் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வரை நீக்க கோரி எம்எல்ஏக்கள் மற்றும் 4 அமைச்சர்கள் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத்தை சந்தித்திருந்த நிலையில், அவர்களது கோரிக்கையை ராவத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதனிடையே பஞ்சாப் காங்கிரஸ் அரசியல் குறித்து பேசிய ராவத், பஞ்சாபில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலை தான் தலைமையேற்று நடத்த  உள்ளதாக கூறினார்.

மேலும் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த  மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவின் ஆலோசகர்களை கட்சி நியமிக்க வில்லை என்றும், கட்சிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் அவர்களது செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.