முறைப்படி ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது...  விவசாயிகள் திட்டவட்டம்...

நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களும் முறையாக வாபஸ் பெறப்படும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகெய்ட் தெரிவித்துள்ளார். 

முறைப்படி ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது...  விவசாயிகள் திட்டவட்டம்...

விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் வெற்றியாக மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் அனைவரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். காஜிபூர் எல்லையில் விவசாயிகள் வாழ்க என்ற கோஷத்தை எழுத்தியவாறு வெற்றிகளிப்பில் விவசாயிகள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.  

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவர் ராகேஷ் திகெய்ட், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் முறையாக வாபஸ் பெறப்படும் வரை போராட்ட களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்பதாகவும்,  குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பிற பிரச்சனைகள் குறித்தும் மத்திய அரசு பேச வேண்டும் எனவும் கூறினார்.