ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை மாற்றும் திட்டம் இல்லை - ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை மாற்றும் திட்டம் இல்லை - ரிசர்வ் வங்கி

இந்திய ரூபாய் நோட்டுக்களில் இடம்பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் சுபாஷ் சந்திர போஸ், அப்துல் கலாம் உள்ளிட்டோருடைய புகைப்படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.  இதற்கு மறுப்பு தெரிவித்து ரிசர்வ் வங்கி தரப்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

ரூபாய் நோட்டுகளில் மற்ற தலைவர்களின் படங்கள் இடம்பெறும் என வெளியான செய்தி வதந்தி என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. காந்தியின் உருவப்படம் மாற்றப்படாது எனவும், அவ்வாறு மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தற்போதுள்ள ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழியவில்லை  என  கடந்த இரண்டு  நாட்களாக பரவி வந்த வதந்திகளுக்கு அறிக்கை மூலம் ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.