பதவியில் சுழற்சி முறை கிடையாது... சட்டீஸ்கர் முதலமைச்சர் திட்டவட்டம்...

சத்தீஸ்கர் முதலமைச்சர் பதவியில் சுழற்சி முறை கிடையாது என அம்மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பதவியில் சுழற்சி முறை கிடையாது... சட்டீஸ்கர் முதலமைச்சர் திட்டவட்டம்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரசில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கும், இணையமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கும் இடையே நிலவி வந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அவர்கள் இருவரையும் ராகுல் காந்தி தனது வீட்டுக்கு அழைத்து பேசினார். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக இருவரும் தெரிவித்திருந்தனர். எனினும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் நேற்று டெல்லி சென்றனர். முதலமைச்சர் பூபேஷ் பாகலும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய முதலமைச்சர் பூபேஷ் பாகல், அனைத்து விஷயங்களையும் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகவும், அரசியல் மற்றும் மாநில நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டார். 

பூபேஷ் பாகலின் தலைமையிலான அரசு, ஜூன் மாதத்தில் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்தது. எனவே, டி.எஸ். சிங் தியோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.