இந்தியாவுடன் மோத இன்னும் பயிற்சி தேவை...  சீனாவை கலாய்த்த பிபின் ராவத்...

இந்தியாவுடன் மோத இன்னும் பயிற்சி தேவை என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் மோத இன்னும் பயிற்சி தேவை...  சீனாவை கலாய்த்த பிபின் ராவத்...
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு தங்களுக்கு சிறந்த பயிற்சி தேவை என்பதை சீனா வீரர்கள் உணர்ந்திருப்பார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
 
லடாக் எல்லையில் சீன படைகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,  கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் பிற மோதல் சம்பவங்களுக்கு பிறகு, தங்களுக்கு சிறந்த பயிற்சி தேவை என்பதை சீனா உணர்ந்திருக்கும் என்றும் இமயமலை பகுதியில் மோதலில் ஈடுபடுவதில் சீனாவுக்கு போதிய அனுபவம் இல்லை எனவும் கூறினார்.
 
லடாக் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சீன வீரர்கள் அநேகமாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் போல தோன்றுவதாகவும் அவர்கள் குறுகியகால போருக்கு வேண்டுமானால் சரிபட்டு வருவார்களே தவிர, கரடு முரடான மலைப்பகுதியில் போரிடுவதற்கும் அவர்களுக்கு சிறந்த பயிற்சி தேவை எனவும் குறிப்பிட்டார். மேலும் சீனா வீரர்களின் அசைவுகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.