பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாள்: விமரிசையாக கொண்டாடி வரும் பாஜக தொண்டர்கள்

பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் பாஜகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாள்: விமரிசையாக கொண்டாடி வரும் பாஜக தொண்டர்கள்

பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் பாஜகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, வாரணாசி மக்களவை தொகுதியில் நேற்று இரவு 71 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. 71 முக்கிய கோவில்களில் பிரம்மாண்ட சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளதுடன், காசியில் 71 கிலோ விசேஷ லட்டு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்க பாஜக தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள லால்காதி சவுராஹாவில், மோடியின் 71ஆவது பிறந்தநாளை குறிக்கும் வகையிலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை வலியுறுத்தும் வகையிலும், 71 அடி நீளமுள்ள தடுப்பூசி வடிவிலான கேக்கை பாஜகவினர் வெட்டி கொண்டாடினர். பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசிகளை செலுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 

மேலும் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகத்திலிருந்து மோடி உருவம் பொறிக்கப்பட்ட 3 கோடி அஞ்சல் அட்டைகளை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளனர்.