இஸ்லாமிய பெண்களுக்கு இன்று முக்கிய நாள்…  

முத்தலாக் நடைமுறை தடைசெய்யப்பட்ட தினமான இன்று, முஸ்லிம் பெண்கள் உரிமை தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்கு இன்று முக்கிய நாள்…   

முத்தலாக் நடைமுறை தடைசெய்யப்பட்ட தினமான இன்று, முஸ்லிம் பெண்கள் உரிமை தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட்1ம் தேதி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று இஸ்லாமியப் பெண்கள் உரிமை தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, முத்தலாக் தடை செய்யப்பட்ட பிறகு, காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவாவது குறைந்துள்ளது எனத் தெரிவித்தார். இஸ்லாமியப் பெண்கள் முத்தலாக் தடை சட்டத்தை பெரிதும்  வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.