நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை...!!

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை...!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  இந்தோனேசியாவில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் நேற்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகயாக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்த சில மணி நேரங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியது.

இந்நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கி. மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை எனினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கண்ணகி காப்பிய ஆசிரியருக்கு மரியாதை...!!!