ஆந்திராவில் அணை உடைந்து தண்ணீர் வெளியேறியதில் 2 அரசு பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கி 8 பேர் பலி...

ஆந்திர மாநிலத்திலத்தில் அன்னமய்யா அணை உடைந்து தண்ணீர் வெளியேறியதில் 2 அரசு பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பலியாகியுள்ளதாகவும் 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திராவில் அணை உடைந்து தண்ணீர் வெளியேறியதில் 2 அரசு பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கி 8 பேர் பலி...

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதில் பல பகுதிகளில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடப்பா மாவட்டம் ராஜாம்பேட்டை அருகே கடந்த 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அன்னமய்யா அணையில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அணை உடைந்து தண்ணீர் வெளியேறியுள்ளது.

இதில் அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய வெள்ள நீர் அப்பகுதி முழுவதையும் மூழ்கடித்த நிலையில் அவ்வழியாக பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த 2 அரசு பேருந்துகளும் நீரில் மூழ்கியுள்ளது. பேருந்து நீரில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 8 பேர் பலியாகியுள்ளனர். கடும் போராட்டத்திற்கு பிறகு 20பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 50 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்கிறது.