புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்...

3 லட்சம் கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்...

3 லட்சம் கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்தவகையில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையைக் கொண்டுவரவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின்பாதைகளின் மூலம் இணைக்க 19ஆயிரத்து 41 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிர்மலா சீதாராமன் அறிவித்த 8 நிவாரணத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.