மாபியாக்கள் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றம் - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மாபியாக்கள் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாபியாக்கள் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றம் - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு  20ம் தேதி 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்தல்  பரப்புரை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்மற்றும் மத்திய அமைச்சர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கான்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஒருபோதும் உடைக்காது என்றார். தேர்தலின் போது கூறப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் எனவும் மாபியாக்கள் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றப்பட்டுள்ளதாகவும்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதேபோல் ஹமிர்பூரில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,     கொரோனா காலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எந்த கட்சிகளாவது மக்கள்  நலன் குறித்து விசாரிக்க முன்வந்தார்களாஎன வினவினார். எனவே  சந்தர்ப்பவாதிகளிடம் உத்தரப் பிரதேச மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அவர் பேசினார்.

 இதைப்போல் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் போட்டி அளித்துவரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்ஔரியாவில் சமாஜ்வாதி  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் லகிம்பூரில் விவசாயிகளை கொன்றவர்கள் கட்டாயம் சிறைக்கு செல்வார்கள் என உறுதி அளித்தார்.  மேலும் குற்றவாளிகளை காப்பாற்றியவர்களும் சிறைக்கு செல்ல சமாஜ்வாதி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.