3 நாள் பயணமாக குடியரசுத் துணை தலைவர் புதுச்சேரி வருகை...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1 புள்ளி 5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்சார தயாரிப்பு நிலையத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டிற்கு சென்ற அவர், பாரதியாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 கோடியே 67 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை தொடக்கி வைத்தார். ஜிப்மா் வளாகத்தில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.