அமைதியாக சென்ற விவசாயிகள் மீது அதிவேகத்தில் மோதிய கார்... விவசாயிகள் தூக்கி வீசப்படும் வீடியோ காட்சி...

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் விவசாயிகள் மீது, மத்திய அமைச்சர் அமித் மிஷ்ராவின் கார் மோதியது தொடர்பான புதிய வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

அமைதியாக சென்ற விவசாயிகள் மீது அதிவேகத்தில் மோதிய கார்... விவசாயிகள் தூக்கி வீசப்படும் வீடியோ காட்சி...

லக்கீம்பூருக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது, மத்திய அமைச்சருக்கு சொந்தமான கார் வேகமாக மோதியதில் 4 பேர் பலியாகினர். இந்தக் காரை மத்திய அமைச்சரின் மகன் ஓட்டி வந்ததாகவும், வேண்டுமென்ற காரை கூட்டத்தில் செலுத்தி விவசாயிகளைக் கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த மத்திய அமைச்சர் அமித் மிஸ்ரா, காரை தனது மகன் இயக்கவில்லை என்று கூறினார். மேலும் தங்களது வாகனங்கள் மீது விவசாயிகள் கல் வீசித் தாக்கியதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் விவசாயிகள் மீது கார் மோதியது தொடர்பான புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இதில் அமைதியாக சென்று கொண்டிருந்த விவசாயிகளின் மீது அதிவேகத்தில் காரை மோதுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. 

இந்த வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்பி வருண் காந்தி,விவசாயிகளின் மரணங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். கொலை செய்வதன் மூலம் போராட்டத்தை அடக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி, பிரதீப்குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. லக்கிம்பூரில் தங்கி அவர் இந்த விசாரணையை மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே லக்கீம்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழகை விசாரிக்க உள்ளது.