காலை 11 மணிக்குள் ஆஜராக வேண்டும்... லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் அமைச்சர் மகனுக்கு சம்மன்...

இன்று காலை 11 மணிக்குள் ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ரா இல்லத்தில் இரண்டாவது சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.

காலை 11 மணிக்குள் ஆஜராக வேண்டும்... லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் அமைச்சர் மகனுக்கு சம்மன்...

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பின்னர் அதனால் ஏற்பட்ட கலவரத்தினால் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரும், மேலும் 4 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

வன்முறை தொடர்பாக உத்திரபிரதேச போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இணை அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ரா நேற்று காலை 11 மணிக்கு ஆஜராக கோரி உத்தரப் பிரதேச போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தினால், மீண்டும் 2வது முறையாக ஆஜராக கோரி சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. உத்திரபிரதேர் மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில், இன்று காலை 11 மணிக்கு ஆஜராக கோரி இரண்டாவது சம்மனை போலீசார் ஒட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நேற்றைய உச்சநீதிமன்ற விசாரணையின் போது, உத்தரப் பிரதேச அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே தரப்பிலும் இன்று வரை ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு இருந்தார்.  மற்றொரு பக்கம், ஆஷிஷ் மிஸ்ராவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாவும், அதனால் அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை எனவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.