விமானத்தை பத்திரமாக தரையிரக்கிய விமானிகளை நினைத்து பெருமை கொள்கிறோம் - ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம்!

விமானத்தை பத்திரமாக தரையிரக்கிய விமானிகளை நினைத்து பெருமை கொள்கிறோம் - ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம்!

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் தீப்பிடித்த விமானத்தை பத்திரமாக தரையிரக்கிய விமானிகளை நினைத்து பெருமை கொள்வதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் என்ஜின் பழுதால் தீப்பிடிக்கவே, அவசர அவசரமாக பாட்னாவிலேயே தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரே ஒரு என்ஜினை மட்டும் கொண்டு பயணிகளை பதற்றமின்றி காத்த கேப்டன் மோனிகா அரோரா மற்றும் சகவிமானி பல்ப்ரீத் சிங் பாடியா ஆகியோரை நினைத்து பெருமை கொள்வதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.