இந்தியாவையும் பணக்கார நாடாக மாற்றலாம்!!!! : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவையும் பணக்கார நாடாக மாற்றலாம்!!!! : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்த விரும்பினால் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

”இலவசங்கள்” விமர்சனம்:

நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்த விரும்பினால் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இலவ கல்வி மற்றும் இலவச சுகாதார வசதிகளை “இலவசங்கள்” என்று கூறி விமர்சனம் செய்ய வேண்டாம் என பாஜக தலமையிலான மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தரமான இலவச கல்வி பெற வேண்டும் எனவும் அதற்காக அனைவரும் இணைந்து கூட்டாக செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் கெஜ்ரிவால்.

இந்தியா உலகின் முதல் நாடு:

ஒவ்வொரு குழந்தையும் நாடு முழுவதும் தரமான இலவச கல்வியை பெற வேண்டும் எனவும் ஒவ்வொரு நபருக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் விருப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  இப்போதே அதற்கான பணியினை தொடங்க வேண்டும் எனவும் அப்போது தான் இந்தியா விரைவில் உலகின் முதல் நாடாக மாறும் எனவும் பேசியுள்ளார் கெஜ்ரிவால்.

கெஜ்ரிவால் கனவு:

இந்தியாவை உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாற்றும் ஒரெ ஒரு கனவு மட்டுமே உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  இந்தியா பணக்கார நாடாக மாற வேண்டும் எனவும் அதற்கு ஒவ்வொரு குடிமகனும் பணக்காரனாக மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  ஏழை மக்கள் அனைவரும் பணக்காரராக மாறும் போது இந்தியாவும் பணக்கார நாடாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏழைகள் பணக்காரர்கள் ஆகும் வழி:

பணக்காரர்களிடம் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஆனால் ஒவ்வொரு ஏழையையும் பணக்காரராக மாற்ற விரும்புவதாகவும் ஆம் ஆத்மி தலைவர் கூறியுள்ளார்.  கூலித்தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர் எனவும் அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி தரமானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தால் குழந்தைகள் மருத்துவர், பொறியாளர் , வணிகர் என மேம்பட்டு அவர்கள் குடும்பத்தை சிறப்படைய செய்ய முடியும் என தீர்வும் வழங்கியுள்ளார் கெஜ்ரிவால்.

நாட்டில் 17 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள் எனவும் அவற்றில் பெரும்பாலான பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.  மேலும் அவர்களின் பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் வசதி இல்லை எனவும் அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தினை சிறப்பாக மாற்ற வேண்டும் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் நடக்கும் போது:

நாடு முழுவதும் அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.  பல மாநிலங்கள் மக்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்க மறுப்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  மேலும் டெல்லியில் 2.5 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கியிள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் டெல்லியில் இது சாத்தியமென்றால் நாடு முழுவதும் இது சாத்தியமாகாதா என கேள்வியுமெழுப்பியுள்ளார் கெஜ்ரிவால்.

இதையும் படிக்க: மருந்து தட்டுப்பாடு…கடும் நெருக்கடியில் இலங்கை!