அமைச்சரவை விரிவாக்கத்தால் என்ன பயன்... ராகுல்காந்தி விமர்சனம்...

மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், தடுப்பூசி அதிகரிக்கப்படவில்லை.

அமைச்சரவை விரிவாக்கத்தால் என்ன பயன்... ராகுல்காந்தி விமர்சனம்...

நாட்டில் மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும்,  தடுப்பூசியின் எண்ணிக்கை கூட்டப்படவில்லை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.  மோடி பிரதமராக பொறுப்பேற்று பின் 2வது முறையாக மத்திய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கூடுதலாக 43 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதால், பிரதமர் மோடியின் கேபினட் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையை குறித்து பேசி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அதுதொடர்பான விளக்கப்படத்துடன் டிவிட்டரில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அந்த வரைவுப்படத்தின் படி, டிசம்பருக்குள் 60 சதவீதம் மக்கள் தொகைக்கு இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமாயின் நாளொன்றுக்கு 88 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் தற்போது வரை சராசரியாக நாளொன்றுக்கு 54 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்படுவதாகவும், மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ள மத்திய அரசு, தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிக்காதது ஏன் என சாடியுள்ளார்.