மம்தா பானர்ஜி வெற்றி பெறுவாரா? இன்று வெளி வரும் முக்கிய தீர்ப்பு..!

சுவேந்து அதிகாரியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடுத்த வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 213 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. இருப்பினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுவெந்து அதிகாரி 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் முதலமைச்சராகப் பதவியேற்று, 6 மாதத்திற்குள் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம் என்ற விதியின்படி, மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று கொண்டார். இதற்கிடையில், சுவெந்து அதிகாரியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில், இன்று காலை 11 மணிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கவுசிக் சந்தா தீர்ப்பு வழங்குகிறார்.