கட்சி கொடியை அகற்றியதால் இருகட்சியினரிடையே மோதல்...சந்திரபாபு நாயுடு செய்தது என்ன?

கட்சி கொடியை அகற்றியதால் இருகட்சியினரிடையே மோதல்...சந்திரபாபு நாயுடு செய்தது என்ன?

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேச கட்சித் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம்:

சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி ஆகும். இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான குப்பத்திற்கு  நேற்று 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆங்காங்கே கட்சிக்கொடிகள்:

அப்போது குப்பம் அடுத்த ராமகுப்பம் பகுதியில் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வருவதால், ஆங்காங்கே கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு, அத்துடன் ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும்,  குவிந்து இருந்தனர். 

தோரணங்களை அகற்றிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி:

சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி, ஆங்காங்கே கட்சி தோரணங்கள் கட்டப்பட்டதால், அதனை கண்டு ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கு தேசம் கட்சியின் கொடிகளை அகற்றினர்.

மோதல்:

கொடிகள் அகற்றப்படுவதை கண்டு ஆத்திரமடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் தட்டிக் கேட்டதால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Jaybeam-film-crew-in-trouble-again-what-will-happen-this-time

போராட்டம்:

இந்த மோதலில் சந்திரபாபு நாயுடு திறக்க இருந்த அண்ணா மலிவு விலை உணவகமும் அடித்துச் சூறையாடப்பட்டது. இதனையடுத்து, ஆளும் கட்சியினரின் அராஜக போக்கை கண்டித்து, சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாகவே, ஆளும் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும்  இடையே கடுமையான போட்டி மனப்பான்மை நிலவி வருவதால் மாநிலம் முழுவதும் அவ்வப்போது இரு கட்சித் தொண்டர்களும் கைகலப்பில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது, சந்திர பாவு நாயுடு  குப்பம் தொகுதில் சுற்றுப்பயணம் செய்யும் நிலையில்,  நகர் முழுவதும் தெலுங்கு தேசம்  கட்சிக் கொடிகளை பறக்க விடட்டதால்  இரு தரப்பினரும் மோதலில் இறங்கினர்.