உங்கள் புதிய கொள்கைகள் மனித உரிமைக்கு ஏற்றதாகவே இல்லை.! மோடி அரசுக்கு ஐ.நா கடும் கண்டனம்.! 

உங்கள் புதிய கொள்கைகள் மனித உரிமைக்கு ஏற்றதாகவே இல்லை.! மோடி அரசுக்கு ஐ.நா கடும் கண்டனம்.! 

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை  சர்வதேச மனித உரிமைகள் கொள்கைக்கு ஏற்றதாக இல்லை என ஐ.நா கூறியுள்ளது. 

ஒன்றிய அரசு பபுதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையை சமீபத்தில் அனுமதித்தது. இந்த கொள்கையின் படி இனி அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றத்தை அரசோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், அரசு கேட்கும் தகவல்களை கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அரசுக்கு எதிரான வீடியோ மற்றும் தகவல்களை உடனே நீக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது.

அரசின் இந்த புதிய கொள்கைக்கு பல்வேறு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டாலும் முக்கிய சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் தங்கள் தரப்பு கோரிக்கைகளையும் ஏற்கவேண்டும் என்று கூறியிருந்தன. ஆனால் ஒன்றிய அரசு அந்த கோரிக்கைகளை புறம் தள்ளி தங்கள் புதிய விதிகளை ஏற்கவேண்டும் என்று அந்த நிறுவனங்களை நிர்பந்தித்திருந்தன.  

இந்நிலையில் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை குறித்து ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் அவையின் குழு அது சர்வதேச மனித உரிமைகள் கொள்கைக்கு ஏற்றதாக இல்லை என்று கூறியுள்ளது. இது ஆளும் பாஜக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.