பீதியை கிளப்பும் ஜிகா வைரஸ்... தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மக்கள்...

கேரள மாநிலத்தில் மேலும் 3 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பீதியை கிளப்பும் ஜிகா வைரஸ்...  தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மக்கள்...

கேரள மாநிலத்தில் மேலும் 3 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனாவின் 2வது அலையின் பாதிப்பில் இதுவரை மீளாத நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அறிகுறிகள் உள்ள பலரிடம் அது தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜிகா வைரஸ் பரவல் காரணமாக, கேரளாவில் 3-ம் கட்டமாக அறிகுறிகள் உடைய 8 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அதில் 29 வயது மருத்துவமனை ஊழியர், 2 வயது குழந்தை மற்றும் 46 வயது நபருக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொசுக்களால் பரவும் இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.