காங்கிரஸுக்கு தலைவலியைக் கொடுக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு

அசோசியேட்டட் ஜேர்னல் நிறுவனம் 1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் நிறுவனம் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 5000 பேரை பங்குதாரர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

காங்கிரஸுக்கு தலைவலியைக் கொடுக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் என்பது தி அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் நாளிதழாகும். அசோசியேட்டட் ஜேர்னல் நிறுவனம் 1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் நிறுவனம் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 5000 பேரை பங்குதாரர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடையவர்கள். இதன் நிறுவனர் ஜவஹர்லால் நேரு ஆவார். இந்நிறுவனத்தின் சார்பில் நவ்ஜீவன் என்னும் இந்தி இதழும், கௌமி ஆவாஸ் என்னும் உருது இதழும் வெளியிடப்படுகிறது. ஆங்கிலேயர் எதிர்ப்பில் முதன்மை பங்கு வகித்தது இந்நாளிதழ்.

ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டுவதற்கும், ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டச் செய்திகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வதிலும் இந்நாளிதழ் முக்கியப் பங்காற்றியது.

1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததையொட்டி கடுமையான பத்திரிகை தணிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக் 1942 முதல் 1945 வரை நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. மீண்டும் 1946 ஆம் ஆண்டு முதல் இந்நாளிதழ் வெளிவரத் தொடங்கியது.

கடந்த 2008ஆம் ஆண்டில் இந்த நாளிதழ் வெளியீட்டை நிறுத்துவதற்கான ஆலோசனைகள் தொடங்கின. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தற்காலிகமாக தனது வெளியீட்டை நிறுத்துவதாக் அறிவித்தது. விளம்பரங்கள் மூலமாக வந்த வருவாய் குறைந்தது, அதிக ஊழியர்களை பணியமர்த்தியது போன்றவை நாளிதழின் முடக்கத்திற்கு காரணமாகக் கூறப்பட்டன.

தி அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் நிறுவனம் மின்னணு ஊடக வடிவில் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தது. நவம்பர் 14, 2016 அன்று நேஷனல் ஹெரால்டு ஆங்கில இணையதளம் தனது செய்திச் சேவையை தொடங்கியது. நேஷனல் ஹெரால்டு, நவ்ஜீவன், கௌமி ஆவாஸ் மீண்டும் அச்சு வடிவில் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருந்தது.

தி அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து 90 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் பெற்றிருந்தது. அதைத் திரும்பக் கொடுக்க முடியாத சூழலில் தனது நிறுவன உரிமையை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனத்திற்கு தனது பங்குகளை மாற்றியது. இதில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற வழிகாட்டலில் அமசாக்கத் துறை தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனப் பரிமாற்றத்தில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அமலாக்கத்துறை சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அழைப்பாணையை அனுப்பியது.

ராகுல் காந்தியை ஜூன் 14, 2022 முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை செய்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவ ஓய்வில் உள்ளதால் தனக்கான் விசாரணை தேதியை தள்ளி வைக்கக் கோரியிருந்தார். அமலாக்கத்துறை அவரின் உடல்இலையை கருத்தில் கொண்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையால் காங்கிரஸ் தலைமைக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் மீண்டும் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.    

- ஜோஸ்