கொரோனா இருக்கா... 3 மணி நேரத்தில் விடை காணலாம்... இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

கொரோனா இருக்கா... 3 மணி நேரத்தில் விடை காணலாம்... இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

உப்பு கரைசல் மூலம் கொரோனா பரிசோதனை நடத்தி 3 மணி நேரத்தில் விடை காணும் புதிய முறைமையை, நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 


"Saline gargle RT-PCR"  என்ற முறைமையை பயன்படுத்தி எளிதில் கொரோனா இருக்கா, இல்லையா என்ற தீர்வுக்கு வந்திவிட முடியும். இதற்கென பிரத்யேக உபகரணங்கள் தேவை இருக்காது. மேலும் இதனை எளிய முறையில் நகரவாசிகள் மட்டுமல்லாது உள்ளூர் கிராம மக்களும் பயன்படுத்தி கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  

தற்போது வரை பயன்பாட்டில் உள்ள கொரோனா பரிசோதனை முறையில் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளி எடுக்கப்படுகிறது. இதற்கு நிபுணர்களின் உதவி தேவைப்படுகிறது. இதற்கென குறிப்பிட்ட கால அவகாசமும் தேவைப்படுகிறது. 

ஆனால் RT-PCR முறை மிகவும் எளிமையானது. டெஸ்ட் டியூபில் கலக்கி வைக்கப்பட்டிருக்கும் உப்பு கரைசலை வாயில் gargle செய்து அதனை மீண்டும் அந்த டெஸ்ட் டியூபில் உமிழ்ந்தால் மட்டும் போதுமானது. பின்னர் அந்த திரவத்தை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தால் போதுமானது. இந்த திரவத்தை ஆய்வு கூடத்தில் சூடு படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கும்,மற்றவர்களுக்குமான வித்தியாசத்தை காணுமுடியும் என்று தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.