மேகேதாது அணையைக் கட்ட முயலும் கர்நாடக பாஜக அரசு

மேகேதாது அணையைக் கட்ட முயலும் கர்நாடக பாஜக அரசு

இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை பெங்களூருவில் சந்தித்துப் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை வரும் 6 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க, கர்நாடகா அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரு சென்றுள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது காவிரி விவகாரம், மேகதாது அணைக்கு அனுமதி வழங்குதல், மகதாயி நதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.