இந்தியா - சீனா 16 ஆவது சுற்றுப் பேசுவார்த்தை

இந்தியா - சீனா 16 ஆவது சுற்றுப் பேசுவார்த்தை

இந்தியா சீனா இடையே 16வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை ஜுலை 17 அன்று  சீன - இந்திய எல்லையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீன - இந்திய எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களிடம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பபட்டு வருகிறது. 

ஏற்கனவே நடைபெற்ற 15 சுற்று பேச்சு வார்த்தைகளில், இந்திய எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த சீன ராணுவத்தின் முகாம்கள் அகற்றுவது, அமைதி ஒப்பந்தத்தின் படி எல்லைப் பகுதிகளுக்கு அருகே ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது, இரு நாட்டினரும் அமைதியை நிலை நாட்டுவதற்கு தேவையான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.  

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள 16வது சுற்று பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் பகுதியில் இருந்து சீனப் படைகள் விலக்கி கொள்வது குறித்து இந்தியா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.