நாடாளுமன்றத்தில் தடைவிதிக்கப்பட்ட வார்த்தைகள் தொடர்பான சர்ச்சை-ஓம் பிர்லா பதில்

நாடாளுமன்றத்தில் தடைவிதிக்கப்பட்ட வார்த்தைகள் தொடர்பான சர்ச்சை-ஓம் பிர்லா பதில்

நாடளுமன்ற நடைமுறைகளை பற்றி முழுமையாக  அறியாத மக்கள் பலவிதமான கருத்துக்களையும் அரசாங்கத்திற்கு எதிராக கூறி வருகின்றனர் என்று மக்களவை சாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.  சட்டமன்றங்கள் அரசாங்கத்தை சாராது சுதந்திரமாக இயங்குகின்றன என்றும் வலியுறுத்திள்ளார்.

நாடாளுமன்றத்தில்  பயன்படுத்த எந்த வார்த்தைக்கும் தடை விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா.  மேலும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை கொண்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை. உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உண்டு. அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது, ஆனால் அது நாடாளுமன்றத்தின் விதிமுறைப்படி இருக்க வேண்டும் என்று பிர்லா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  மேலும் அவர், நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கைக்கு எதிக்கட்சிகள் பாஜக  இந்தியாவை அழிக்கிறது என்று கூறி குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்றும் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் நாடாளுமன்றத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நடைமுறைகளை அறியாத மக்கள் அவர்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். சட்டமன்றங்கள் அரசாங்கத்திலிருந்து சுதந்திரமானவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது 1959 ஆம் ஆண்டு முதல் தொடரும் ஒரு வழக்கமான நடைமுறையாகும் என்று பிர்லா கூறினார். இது சட்டப்பூர்வமற்றதாகக் கருதப்படும் சொற்களின் பட்டியலைத் தொகுக்கும் சிறு புத்தகத்தின் வெளியீடு ஆகும்.

நாடாளுமன்றத்திலிருந்து பயன்படுத்த தடை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை ஆளும் கட்சி உறுப்பினர்களும்  எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பயன்படுத்துகின்றனர் என்று பிர்லா குறிப்பிட்டு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்:

 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியாகியுள்ளன. 

அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர்,  நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

 
 சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், முதலைக் கண்ணீர், கழுதை, பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள் உள்ளிட்ட வார்த்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.