பழங்குடி மக்களுக்கு நீதி கேட்டு வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

பழங்குடி மக்களுக்கு நீதி கேட்டு வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

சத்தீஸ்கரில் இந்திய துணை இராணுவப் படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பழங்குடியினரின் வழக்கு குறித்து, சுதந்திரமான விசாரணை கோரிய மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.

தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் எனக்கூறி, கடந்த 2009ஆம் ஆண்டு 17 பழங்குடியினரை பாதுகாப்புப்படையினர் மானபங்கப்படுத்தி, தூக்கு தண்டனை விதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, 2 வயது குழந்தைகள் உட்பட பலரையும் தாக்கியதாகவும் மனுதாரரால் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான விரிவான விசாரணை கோரி, சமூக ஆர்வலர் ஹிமான்சு குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இறந்தவர்களின் குடும்பத்தாரை தாக்கிய துணாஈ இராணுவப் படையினர், இறந்தோரின் உடல்களை சட்ட விரோதமாக புதைப்பதையும் பார்த்ததாக அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

அப்போது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக ஹிமான்சு செயல்படுவதாக, மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது சுட்டிக் காட்டப்பட்டது. இந்நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து, ஹிமான்சுவுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.