கோவாக்‌ஷின் சிறந்த தடுப்பூசியா? ஆய்வு சொல்வது என்ன?

கோவாக்சின் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட ஆய்வு முடிவுகள் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவாக்‌ஷின் சிறந்த தடுப்பூசியா? ஆய்வு சொல்வது என்ன?

கோவாக்சின் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட ஆய்வு முடிவுகள் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது கோவாக்சின் தடுப்பூசி. தற்போது மக்கள் பயன்பாட்டில் இருக்கும் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் நேற்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் ஒப்புதலுக்காக சர்ம்பிக்கப்பட்டது.

ஆய்வுகளின் முடிவில் கோவாக்சின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 78 சதவீத செயல்திறனை கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவின் தரவுகளை ஆராய்ந்த மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  இதுதொடர்பான பரிந்துரை, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டுக்கான பட்டியலில் கோவாக்சின் மருந்தை சேர்ப்பது குறித்து மீண்டும் வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்திருந்த நிலையில் கூடுதல் தரவுகளை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சினை சேர்ப்பது தொடர்பான முதல் கட்ட கூட்டம் இன்று நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.