பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்கு...!!

பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்கு...!!

பிபிசி செய்தி  நிறுவனத்தின் இந்திய கிளையின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நேரடி அந்நிய முதலீட்டு சட்டப்படி முறையான அனுமதி பெறாமல் இந்தியாவில் முதலீடு செய்ததாக பிபிசி மீது குற்றம் சுமத்தியுள்ளது அமலாக்கத்துறை. மேலும் நிதி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக பிபிசி நிறுவனத்தின் 6 ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு  செய்துள்ளது. 2 வாரங்களுக்கு முன்னரே இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

முன்னதாக பிபிசி இணைய தளம் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டது. இந்த கலவரத்தில் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பு குற்றம் சாட்டியது பிபிசி. இதனால் இந்த ஆவணப்படத்திற்கு இந்திய அரசு தடை விதித்து இருந்தது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் பிபிசி இந்திய செய்தி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.