மியான்மரில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க வேண்டும்-நாராயணசாமி!

சைபர் குற்றங்களுக்காக அவர்களை பயன்படுத்துகின்றார்கள்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க வேண்டும்-நாராயணசாமி!

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் காரைக்கால் உள்ளிட்ட அனைத்து தமிழக இளைஞர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்க்கு கடிதம் எழுதியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வேலைக்குச் சென்ற தமிழக இளைஞர்கள்

தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்காக சென்ற காரைக்கால் உள்ளிட்ட தமிழக இளைஞர்கள் மியான்மாரில் அடைக்கப்பட்டு சைபர் குற்றங்களுக்காக அவர்களை பயன்படுத்துகின்றார்கள். மேலும் சித்தரவதை செய்யப்படுகின்றார்கள், அவர்களை மீட்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பரவி வரும் காய்ச்சல்

புதுச்சேரியில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எதையும் எடுக்காத புதுச்சேரி சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுரை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார். நடமாடும் மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்படும் என ஆளுநர் கூறியும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. துறையின் அமைச்சரான முதலமைச்சர் ரங்கசாமியும் கண்டுகொள்ளாதது வேதனையளிப்பதாக இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

கூட்டணியிலிருந்து வெளியேறுமா பாஜக?

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி அவர்களின் தொகுதிகள் புதுச்சேரி அரசால் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொடுக்கும் ஆதரவை பாஜக திரும்பப் பெற வேண்டும் எனவும், பாஜகவிற்கு தைரியம் இருந்தால் கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டியது தானே என நாராயணசாமி பேசியுள்ளார்.