ஜிஎஸ்டி அமலானதும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.! நிர்மலா சீதாராமன் பெருமிதம்..!

ஜிஎஸ்டி அமலானதும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.! நிர்மலா சீதாராமன் பெருமிதம்..!

ஜிஎஸ்டி அமலானதும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

சரக்கு மற்றும் சேவை வரிகள் என அழைக்கப்படும் ஜிஎஸ்டி அமலாகி நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்படைந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இந்த 4 வருடங்களில் நிலையான வரிவிதிப்பை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்ட அவர்,  ஜிஎஸ்டி வரிவசூல் சீராக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலானாதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் முறையாக வரிசெலுத்திய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.