ஹர் கர் திரங்கா....!

மூவர்ண கொடியை அனைவரது வீட்டிலும் பறக்க விட வேண்டும்-உள்துறை அமைச்சர் 

ஹர் கர் திரங்கா....!

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஆகஸ்டு 13 முதல்15 வரை அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமித் ஷா நமது தேசிய கொடி ஏற்று கொள்ளபட்ட தினமான இன்று அனைத்து சமூக ஊடகங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

இந்தியாவின் சிறப்பை வெளிப்படுத்தும் சின்னமாக நமது தேசிய கொடி விளங்குகிறது என வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.  மேலும் தேசிய கொடியை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்டு 13 முதல் 15 வரை அனைவரும் வீட்டின் மாடியில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

இந்திய மக்கள் அனைவரும் ஹர் கர் திரங்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் வீட்டின் மாடியில் மூவர்ண கொடியை பறக்க விட வேண்டும் அல்லது காட்சிபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டு கொண்டுள்ளார். 

ஜீலை22, 1947:

பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட மூவர்ண கொடி 1947ம் ஆண்டு ஜூலை 22 அன்று இந்திய அரசமைப்பால் தேசிய கொடியாக ஏற்று கொள்ளப்பட்டது.  நமது தேசிய கொடி ஏற்றுகொள்ளப்பட்டு இன்று 75 ஆண்டு நிறைவடைகிறது.