தினமும் சட்னியா சாப்பிட முடியும்?- உணவுக்கான ஜி.எஸ்.டி வரி குறித்து எம் பி கனிமொழி கேள்வி!

உணவுக்காக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிகள் குறித்து, கருத்துகளை வெளிப்படுத்திய எம் பி கனிமொழியின் பேச்சு, பலரது வரவேற்புப் பெற்றது.

தினமும் சட்னியா சாப்பிட முடியும்?- உணவுக்கான ஜி.எஸ்.டி வரி குறித்து எம் பி கனிமொழி கேள்வி!

மக்களைவையில் ஜி.எஸ்.டி வரி குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்த்து, சரமாரியாக கேள்விகள் எழுப்பிய கனிமொழி, உணவு இல்லாமல், வெறும் சட்னி அறைத்தா சாப்பிடுவது என்று கேட்டது, அனைவரது கவனத்தையும் பெற்றது.

விலைவாசி உயர்வு:

தொடரும் விலைவாசி உயர்வு காரணமாக அவதிப்படும், சாமானிய மக்களின் கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதத்தில், அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிகளைக் குறித்து கேள்வி எழுப்பிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, சிலவற்றை நகைச்சுவையாகக் கேட்டதால், பலரது ஆதரவையும் பெற்றார்.

மேலும் படிக்க | ஜூன் 28ல் 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் - மத்திய அரசு தெரிவிப்பு!

சரமாறி கேள்வி:

கருப்புப் பணம் குறித்து பேசிய மத்திய அரசிற்கு எதிராக கேள்விகள் எழுப்பிய பின், அதியாசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிகளைப் பற்றி தொடர் கேள்விகளை முன்வைத்தார்.

விலைகளின் ஒப்பீடு:

அப்போது பேசிய அவர் அதிகரித்திருப்பதை , “அதியாவசிய பொருட்களான உணவு பொருட்களுக்கு விலை அதிகரித்துள்ளது. 2014இல் பாமாயில் விலை அப்போது 68 ரூபாய், தற்போது 160 ரூபாய்; வனஸ்பதி முன்பு 70 தற்போது 170; கடலெண்ணெய், 116இல் இருந்து 188 ஆக உயர்வு. இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் பயன்படுத்தக் கூடிய எண்ணெய் விலை உயர்ந்துக் கொண்டே போகிறது.” என்று கூறினார். 

மேலும் படிக்க | ஆம் ஆத்மி பெட்ரோலுக்கு எங்கே போவான்?- எம் பி கனிமொழி சரமாரி கேள்வி:

Image

சட்னி அரைத்து சாப்பிடுவதா?

பின், மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே, கூறியதை மேற்கோள் காட்டி பேசிய கனிமொழி, “மாண்புமிகு எம்பி துபே அவர்கள், வெங்காயம் தக்காளி விலை குறைவு குறித்து கூறினார். ஆனால், அவை இரண்டு மட்டும் வைத்து தினமும், மூன்று வேளை சட்னி அரைத்து சாப்பிட முடியுமா?” என்று கேட்டதற்கு, அனைவரும் மேசை தட்டி வரவேற்றனர்.

வாக்குறுதி நிரைவேற்றப்படவில்லை:

எல்லா விலையும் அதிகரித்துள்ளதால், ஒரு குடும்பத்தில், ஒரு குழந்தைக்கு உணவு கூட வாங்கித் தர கஷ்டப்படும் நிலை ஒரு தாயிற்கு இருக்கிறது எனக் கூறிய கனிமொழி, இறுதியாக, கேஸ் சிலிண்டர் கோட்டாவை விட்டுக் கொடுப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என வாக்குறுதிக் கொடுத்த அரசு அதனை நிரைவேற்றவில்லை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.