ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மார்கரெட் ஆல்வா....

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மார்கரெட் ஆல்வா....

குடியரசு துணை தலைவர்  தேர்தலில் போட்டியிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மார்கரெட் ஆல்வா  வேட்பாளராக  இன்று  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின் போது ஏராளமான உடன்கட்சி தலைவர்களும் அவருடன் கலந்து கொண்டனர்.

வெங்கையா நாயுடு பதவிக்காலம் முடிவு:

தற்போதைய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைவதால், குடியரசு துணைத் தலைவருக்கான  தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல்:

காங்கிரஸ் கட்சியின்  ராகுல் காந்தி, என்சிபி கட்சியின் சரத் பவார், சிபிஐ-எம்-கட்சியின் சீதாராம் யெச்சூரி, சிபிஐ- கட்சியின் டி ராஜா, மாநிலங்களவை  எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மார்கரெட் ஆல்வா  வேட்புமனு தாக்கலின் போது உடனிருந்தனர்.

இது ஒரு கடினமான தேர்தல் என்பதில் சந்தேகமில்லை எனவும் ஆனால் இச்சவாலை ஏற்க நான் பயப்படவில்லை எனவும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு கூறினார் மார்கரெட் ஆல்வா.

மார்கரெட் ஆல்வா யார்:

80 வயதான ஆல்வா, ராஜஸ்தான் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் மூத்த தலைவருமாவார். மார்கரெட் ஆல்வா, குடியரசு துணை  தலைவர் பதவிக்காக   எதிர்க்கட்சி வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மேற்கு வங்க கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தேசிய ஜனநாயக கூட்டணியின்  குடியரசு துணை தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக ஆல்வா போட்டியிடுகிறார். 

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.