சமாஜ்வாடி கட்சின் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேரத் தயார்  என கூறும் பாஜக தலைவர்!

சமாஜ்வாடி கட்சின் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேரத் தயார்  என கூறும் பாஜக தலைவர்!

பாரதிய ஜனதா கட்சியில் 100 சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர்கள் இணைவார்கள் என்ற உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பேசியிருப்பது பெரும் விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது.

அகிலேஷ் யாதவ் கருத்து

பாரதிய ஜனதா கட்சியின் 100 சட்டமன்ற உறுப்பினர்களுடன் மவுரியா வந்து பீகாரில் நடந்ததை போல ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தால் சமாஜ்வாடி கட்சி அவருக்கு ஆதரவளிக்கும் என்று உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.

பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், கடந்த மாதம், பா.ஜ., உடனான உறவை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து, பீகாரில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்தார். இதைப் போல பாரதிய ஜனதாவின் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் மௌரியா அக்கட்சியிலிருந்து வெளியேறினால் தாம் ஆதரவளிப்பதாக அகிலேஷ் கூறியிருந்தார்

மௌரியா பதிலடி

சமாஜ்வாடி கட்சியின் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பதிலடி கொடுத்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிகாரம் இல்லாமல் அவநம்பிக்கையுடன் இருக்கிறார். அதிகாரம் இல்லாமல், அகிலேஷ் யாதவ் விரக்தியில் இருக்கிறார். அவர் தண்ணீரில் இல்லாத மீன் போன்றவர். அவர்களின் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேரத் தயாராக உள்ளனர். எங்கள் அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையுடன் திறம்பட செயல்படுவதால் கட்சியை உடைக்கத் தேவையில்லை என்று மௌரியா கூறினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு பதவிக்கு வர வேண்டும் என்ற அகிலேஷ் யாதவின் ஆசை நிறைவேறாது என்று சட்டசபை கூட்டத்தொடரின் போது யாதவை மௌரியா கடுமையாக சாடினார்.

மௌரியாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதை விட, தனது சொந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டும் என்று யாதவ் கூறியதற்கு உத்தர பிரதேச பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரியும் விமர்சித்துள்ளார். கேசவ் பிரசாத் மௌரியா அமைப்புரீதியாக கட்சியின் சித்தாந்தத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். அவர் எப்போதும் பாஜகவுடன் இருப்பார், சுயநலத்துடன் செயல்படும் தலைவர் அல்ல என்றும் அவர் கூறினார்.